‘எந்நேரமும் இந்திய ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்’: உள்துறை அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > World newsஇந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்த காஷ்மீரின் போர் நிறுத்த ஒப்பந்த பகுதிகளான நவ்சேரா-ரஜோர் உள்ளிட்ட 4 பகுதிகளில் , அத்துமீறி குண்டு வீசிய பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த விமானங்கள் பள்ளத்தாக்கில் நொறுங்கி வீழ்ந்ததாகவும், விமானிகள் பாரசூட் மூலம் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளதாக ஏஎன்ஐ அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.
அதே சமயம் இந்த குண்டுவீச்சில் உயிர் சேதம் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் மற்றும் லே விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் செயல்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ரா உளவுப் பிரிவுத் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசர், வெளியுறவு செயலர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து எந்நேரமும் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இதனிடையே, தங்கள் நாட்டு பொதுமக்களை காக்கவும், தங்களது தற்காப்புக்காகவும் பாகிஸ்தானில் வைத்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியுள்ளார். பாகிஸ்தானின் இந்த செய்தியில் உண்மை இல்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘பாத்துகிட்டு இருக்க மாட்டோம்.. பதிலடி கொடுக்க உரிமை இருக்கு’:பாகிஸ்தான் பிரதமர்!
- ‘பயங்கர சத்தம், கண் இமைக்கும் நேரத்தில் பறந்த விமானம்’.. இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்!
- 'என்ன வந்தாலும் பாத்துக்கலாம்'...நாங்க தயாரா இருக்கோம்...உச்சக்கட்ட அலெர்ட்டில் எல்லைப்பகுதி!
- ‘வலிமையாக இருப்போம்’ இந்திய ராணுவம் பகிர்ந்துள்ள உணர்ச்சிமிக்க கவிதை!
- உளவு பார்த்த பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் விமானம் .. சுட்டுத்தள்ளிய இந்திய ராணுவம்!
- 'தாக்குதல் நடத்த திட்டம் போட்டாங்க' ...சொல்லி பாத்தோம் கேக்கல...உள்ள புகுந்து அடிச்சோம்!
- ‘நெஜமா பசங்க செம்மயா விளையாடிருக்காங்க’.. இந்தியாவின் தாக்குதலை புகழ்ந்த கிரிக்கெட் வீரர்!
- ‘மிராஜ் 2000’ போர் விமானத்தைப் பார்த்து பயந்தோடிய பாகிஸ்தான் ‘எஃப்16’ விமானம்.. அதிகாரிகள் தகவல்!
- ஆமா!..இந்திய விமானபடை எங்கள அட்டாக் பண்ணிட்டாங்க...ஆனால்?...பாகிஸ்தான் ராணுவம்!
- புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி..! 1000 கிலோ குண்டுகளை வீசியது இந்தியா..!