"மன்னிச்சுருங்க.. நான் அத செய்ய தவறிட்டேன்!".. 'நாட்டு மக்கள், ராணுவ வீரர்கள்' அத்தனை பேரையும் 'கண்கலங்க வைத்த' வடகொரிய அதிபரின் 'உருக்கமான' பேச்சு!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உணர்ச்சிகரமாக பேசி கண்கலங்கி உள்ள சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் Hwasong-16 என்கிற புதிய ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியது. இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதம் பயங்கரமானது என்றும் உலக அளவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடையே பேசும் பொழுது தங்கள் நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் அளவு ஆழமாகவும் தம் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக நெகிழ்ந்து பேசியதுடன், அதேசமயம் தான் அதை, நிறைவாக செய்ய தவறியதாகவும் இதற்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தம் நாட்டை வழி நடத்திய தமது தந்தை மற்றும் தாத்தாவைப் பற்றி கூறிய கிம் ஜாங் அதன்படி இந்த நாட்டை வழிநடத்தும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதற்கு மக்கள் தம் மீது வைத்த நம்பிக்கைகளுக்கு நன்றி என்றும் தன் முயற்சிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கிம் பேசும் போது கண் கலங்கி விட்டதாகவும், கிம்மின் உரையைக் கேட்ட மக்களும் கண் கலங்கியதாகவும், ராணுவ வீரர்களுக்கு அவர் ஆற்றிய உரையை கண்டு ராணுவ வீரர்களும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னொருபுறம் அனுதாபத்தை பெறுவதற்காக கிம் இப்படி பேசியுள்ளதாகவும் பலர் வழக்கம்போல் விமர்சித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது என்ன புது ஐட்டமா இருக்கு... அதுவும் இவ்ளோ பெருசா'!!.. வாயடைத்துப்போன உலக நாடுகள்... அமெரிக்காவுக்கு சவால் விட்ட வட கொரியா!.. அதிபர் டிரம்புக்கு நெருக்கடி?
- “வடகொரியா வரும் சீனர்களை சுட்டுத்தள்ள உத்தரவா?”.. மீண்டும் படைத்தளபதி அளித்துள்ள பரபரப்பு தகவல்!
- 'காதல்ங்குற பேச்சுக்கே இடம் இல்ல.. சாப்பாடே இதுதான்!'...வடகொரியாவில் நடக்கும் கொடூரங்கள்.. தப்பிவந்த இளம்பெண் கூறும் திடுக்கிடும் தகவல்கள்!
- வட கொரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த... அதிபர் கிம் ஜாங் உன் 'அதிபயங்கர' முடிவு!.. இனிமே ஈ, காக்கா கூட வெளிய வராது!
- 'கிம் இறந்துட்டார்!' .. 'கோமாவில் இருக்கிறார்!'.. 'சகோதரி மாயம்!'.. வதந்திகளை சுக்கு நூறாக்கி 'மாஸ் எண்ட்ரி'!.. என்னதான் நடந்தது?
- “கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு!... இப்படியே போச்சுனா... நமக்கும் ஒரு ‘பாயாசத்த’ போட்ருவான்!..” - கிம்மின் சகோதரி ‘திடீர்’ மாயம்?.. ‘இதுதான் காரணமா?’
- 'எதே... நான் கோமா'ல இருக்கனா'?.. 'திடீர்' என அதிபர் கிம் தோன்றியதால்.. வட கொரியாவில் பரபரப்பு!.. அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை!
- கோமாவில் 'கிம் ஜாங் உன்'??.. அதிபராகும் 'தங்கை'..??,, பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில்,,... நெட்டிசன்கள் 'கூகுள்' பண்ணது இத தான்,,.. அதிர்ச்சி தரும் 'ரிப்போர்ட்'!!!
- “மயில்வாகனம் கேட்டை மூடுறா!”.. வடகொரியாவில் கொரோனா அறிகுறியுடன் முதல் நபர்.. ‘கிம்’ எடுத்த ‘பரபரப்பு முடிவு!’.. அதிகாரிகளுக்கு ஆப்பா?
- மனித எலும்புக்கூடுகளுடன் 'பேய்' படகுகள்... கடற்கரையில் ஒதுங்கியதை பார்த்து 'ஷாக்'கான மக்கள்!