இந்த நவின உலகத்துலையுமா இப்படி! சாத்தானிடமிருந்து பாதுகாக்க தன் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து அடித்த கணவர்!
முகப்பு > செய்திகள் > World news
சாத்தானிடமிருந்து பாதுகாக்க தன் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து அடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சாக்வால் நகரில் தன் மனைவியை சாத்தானிடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி சங்கிலியால் கட்டிப் போட்டுப் பல வாரங்களாக சித்தரவதை செய்து வந்த கணவரை காவல்துறை கைது செய்து அந்தப் பெண்னைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் காவல்துறை அதிகாரிகளிடம் தன்னுடைய கணவரும், மாமியாரும் தன்னை சங்கிலியால் கட்டி வைத்து அடித்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
சாத்தான்களிடமிருந்து பாதுகாக்கவே அவளை சங்கிலியால் பூட்டியதாகவும் அன்றாடம் அடித்ததாகவும் காவல்துறையினரிடம் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணிண் கணவர் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஆரம்பத்தில் அவள் ஒரு மனநோயாளியாக இருந்ததாக அந்த பெண்ணின் கணவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கணவரின் இந்த புகாரை அவர் நிராகரித்துள்ளார். மேலும்,தன்னிடமிருந்து தன்னுடைய கைக் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளையும் தன் கணவர் மற்றும் மாமியார் பிரித்துவிட்டதாகவும் அந்த பெண் போலீஸாரிடம் தெரிவித்ததாகவும். இப்போது அந்த பெண் போலீஸ் காவலில் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து விசாரணை அதிகாரியான அஃப்சல் கில் டான் செய்தி சேனலிடம் தெரிவித்த போது, அந்த பெண்ணிற்கு மனநிலை ஆரோக்கியம் தேவை என்றும். மேலும்,அந்த இரண்டு குழந்தைகள் கணவனின் குடும்பத்தாரிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
‘ஐசியு-வில் இருந்த பெண்.. கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவர்கள், ஊழியர்கள்.. பெண் உட்பட 5 பேர் கைது!
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க ஐபிஎல் நடத்துங்க,நடத்தாம போங்க'...முக்கிய முடிவை வெளியிட்ட பாகிஸ்தான்!
- 'நாம ஒரு பக்கம் வண்டிய திருப்புனா,அது வேற பக்கமா போகுதே'...இதுக்கா இவ்வளவு செலவு செஞ்சோம்!
- 'ஜட்ஜ் ஐயா நடவடிக்கை எடுங்க'...கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான்...உங்க வேலைய பாருங்க!
- 'மைண்ட் மொத்தமும் அங்க தான் இருக்கு'...அதிர்ந்த மக்கள்,சுதாரித்த பிரதமர்...வைரலாகும் வீடியோ!
- விமானத்திலிருந்து 'அபிநந்தன்' அனுப்பிய கடைசி செய்தி என்ன?...வெளியான புதிய தகவல்!
- உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாட தடை கோரிய பிசிசிஐ.. நிராகரித்த ஐசிசி!
- 'அபிநந்தனுடன் வந்த பெண் யாரு'?...வழக்கம்போல் வதந்தியை கிளப்பிவிட்ட...'போலி நெட்டிசன்கள்'!
- 'அபிநந்தனை' அழைத்துவர 'இந்தியா வைத்த கோரிக்கை'...'நிராகரித்த பாகிஸ்தான்'...பரபரப்பு தகவல்கள்!
- 'நடுவழியில் தவித்த பாகிஸ்தான் பயணிகள்'...நேசக்கரம் காட்டிய பஞ்சாப் காவல்துறை...நெகிழ்ச்சி சம்பவம்!
- 'இன்னும் சில மணி நேரம்'!...'பெண்கள்,குழந்தைகள் புடைசூழ வாகா எல்லை...வீர திருமகனே வருக!