‘வறட்சியின் காரணமாக மண்ணை உணவாக உண்ணும் மக்கள்’.. அதிர வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > World news
By |

வறட்சியின் காரணமாக ஹைத்தி என்னும் நாட்டு மக்கள் மண்ணை உணவாக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைத்தி என்கிற நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் காசு கொடுத்து அத்தியாவசியான தேவையான அரிசி, காய்கறிகள் போன்றவற்றைக் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இதனால் அந்நாட்டு மக்கள் மண்ணை ரொட்டி வடிவில் செய்து அதை உணவாக உண்டு வருகின்றனர். அந்நாட்டில் இந்த உணவுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அமெரிக்க கண்டத்திலேயே மிகவும் ஏழ்மையான நாடு ஹைத்திதான் என கூறுகின்றனர். இங்கு வாழும் சுமார் 50 லட்சம் மக்களுக்கு மேல் ஊட்டச்சத்து குறைபாடுடன் வாழ்வதாக ஐ.நா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உணவுப்பஞ்சம் வரும் நாட்களில் இது போன்ற மண்ணை உணவாக உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

HAITIANS, POVERTY, MUDCAKE

OTHER NEWS SHOTS