வேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்?

முகப்பு > செய்திகள் > World news
By |

கூகுள் நிறுவனம் பெண்களை விட ஆண்களுக்கு குறைவாக சம்பளம் தருவதாக அதிரடியான சலசலப்புகள் எழுந்துள்ளன.

கூகுள் நிறுவனத்தில் எண்ணற்ற சரகங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான டிவிஷனான லெவல்  4- ஆவது மென்பொருள் பொறியியல் பிரிவில் பணிபுரிவோரில் ஆண்களை விடவும் பெண்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக, சர்வே ஒன்றின் மூலம் தெரிந்துள்ளது.

இதற்கு விளக்கமளித்த கூகுள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை இதே துறையில் பணிபுரிந்த பெண்களுக்கு ஆண்களை விட சம்பளம் குறைவாக இருந்ததால் நஷ்ட ஈடு கோரி எழுந்த புகாரை சந்தித்ததாகவும், அதனால் கூகுளின் 10 ஆயிரத்து 677 பெண் பணியாளர்களுக்கு நஷ்ட ஈடாக சுமார் 9.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 908 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சூழலை மாற்றும் விதமாக மேற்கண்ட துறையில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக சம்பளம் வழங்கப்படுவதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக இம்முறை ஆண் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கூகுள் வழங்குவதாகவும் போர்ப்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

சர்வதேச அளவில் கூகுளில் பணிபுரியும் 91 சதவீத ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சர்வே முடிவுகளை வைத்து இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியது என்பதும், இதன் காரணமாக செய்யும் பணிக்குத்தான் சம்பளமே தவிர,  பாலின வேறுபாட்டிற்கு சம்பளம் அல்ல என்கிற கருத்து பரவலாக எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

GOOGLE, EMPLOYEES, WOMEN

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்