இதுல போய் டெல்லிக்கு முதல் இடமா? .. க்ரீன்பீஸ் ஆய்வின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > World newsகிரீன்பீஸ் என்கிற உலகத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் காற்று மாசடைதல் பற்றிய 2018-ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் இந்தியாவை குறிப்பாக டெல்லியை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வுமுடிவுப்படி, உலகிலேயே அதிக அளவில் காற்று மாசடையும் நகரமாக ஹரியானாவில் இருக்கும் குருகிராம் என்கிற நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்துள்ள இந்த ஆய்வு முடிவினை மேற்கண்ட நிறுவனம் IQAir Airvisual 2018 world Air Quality Report என்கிற அறிக்கை மூலம் கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இவ்வாறு காற்று மாசுபாடு அடைந்த நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் முதல் 6 நகரங்களும் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது அடுத்த அதிர்ச்சிதரும் தகவல். ஆம், குருகிராம், காஸியாபாத், ஃபரிதாபாத், நொய்டா, பிவாடி மற்றும் பாட்னா ஆகிய 6 நகரங்கள் காற்று மாசடைந்த முதல் 6 நகரங்களாக உலக அளவில் இடம் பெற்றுள்ளன. இதேபோல் உலகிலேயே அதிக அளவில் காற்று மாசடைந்துள்ள (நாடுகளின்) தலைநகரங்களில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது கூடுதல் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.
இதுபற்றி மேலும் தகவல்களை அளித்துள்ள இந்த தொண்டு நிறுவனம், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 20 நகரங்களில் 18 நகரங்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்தவை என்றும், இதன் விளைவால் எதிர்காலத்தில் இந்நாடுகளில் இருந்து 70 லட்சம் மக்கள் உயிரிழக்க நேரும் என்றும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நகரங்களில் 64 சதவீதம் நகரங்களில் காற்று மாசடைந்துள்ள அளவு விகிதம், உலக சுகாதார மையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் என்றும் கூறி அதிர வைத்துள்ளது.
OTHER NEWS SHOTS