"என்னாது...? 'செல்போன், ரூபாய் நோட்டு'ல எல்லாம்... கொரோனா, இத்தன நாட்கள் வரை உயிர் வாழுமா?!!” - அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வுத் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்ரூபாய் நோட்டுகள், கண்ணாடி, செல்போன் போன்றவற்றில் கொரோனா வைரஸ் 4 வாரங்கள் வரை உயிர்வாழும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது
வங்கிகள், ஏடிஎம்களில் பெறப்படும் ரூபாய் நோட்டுகள், கண்ணாடி, செல்போன் போன்ற பொருட்களில் கொரோனா வைரஸ் 28 நாட்களுக்குக் கூட நீடித்திருக்கும் என ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சார்ஸ் கோவ்-2 ஆயுளை மூன்று வெப்பநிலையில் சோதித்துள்ளனர். வெப்பம் அதிகரித்தால் கொரோனா வைரஸ் உயிர்வாழும் விகிதங்கள் குறைவது அதில் தெரியவந்துள்ளது.
மேலும், 20 டிகிரி செல்சியஸில் (68 டிகிரி பாரன்ஹீட்), சார்ஸ் கோவ்-2 மென்மையான மேற்பரப்புகளான மொபைல் போன் திரைகளைப் போன்ற கண்ணாடி, எஃகு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதுவே 30 டிகிரி செல்சியஸில் (86 டிகிரி பாரன்ஹீட்), உயிர்வாழும் வீதம் ஏழு நாட்களாகக் குறைவதும், 40 டிகிரி செல்சியஸில் (104 டிகிரி பாரன்ஹீட்) வெறும் 24 மணி நேரமாக உயிர்வாழும் வீதம் குறைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன், பருத்தி போன்ற நுண்ணிய மேற்பரப்பில் இந்த வைரஸ் குறுகிய காலத்திற்கே உயிர்வாழும் எனவும், குறைந்த வெப்பநிலையில் 14 நாட்கள் வரை மற்றும் அதிக வெப்பநிலையில் 16 மணி நேரத்திற்கும் குறைவாகவே உயிர்வாழும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் கொரோனா வைரஸ் நுண்ணிய மேற்பரப்பில் 4 நாட்கள் வரை உயிர்வாழக்கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது கொரோனா வைரஸின் வாழ்நாள் கணிசமாக நீண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய நோய் எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ட்ரெவர் ட்ரூ, "வைரஸின் மாதிரிகளை சோதனை செய்வதற்கு முன்பு வெவ்வேறு பொருட்களில் அதன் வாழ்நாளை கண்டறிந்தோம். மிகவும் உணர்திறன் முறையைப் பயன்படுத்தி உயிரணு கலாச்சாரங்களை பாதிக்கக்கூடிய நேரடி வைரஸின் தடயங்களைக் கண்டறிந்தோம். வைரஸின் அளவு யாரையாவது தொற்றும் திறன் கொண்டதாக இருக்கும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஒரு நபர் இந்த பொருட்களை கவனக்குறைவாக தொட்ட பின்னர் அதே கையால் வாய், கண்கள் அல்லது மூக்கு போன்வற்றை தொட்டால், அவை மாசுபட்ட 2 வாரங்களுக்கு பின்னும் நீங்கள் பாதிக்கப்படலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்திய மக்களின் இதயத்தில் குடிபுகுந்த ஆம்புலன்ஸ் டிரைவர்...' '200 கொரோனா நோயாளிகளை சுமந்து சென்றவர்...' - நெகிழ்ச்சி சம்பவம்...!
- தமிழகம்: மேலும் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! சென்னையில் மொத்த பாதிப்பு, தமிழகத்தில் பலி எண்ணிக்கை! முழு விபரம்!
- 'குளிர் காலம் வந்திருச்சு... கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா'?.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
- 'இனிமே தான் சவாலான காலகட்டம்'... தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து... அமைச்சர் விஜயபாஸ்கர் 'பரபரப்பு' தகவல்!
- 'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்?!!'... 'மாநகராட்சி தகவல்!'...
- '7 மாசம் ஆச்சு'... 'பிறந்த குழந்தையை பாக்க முடியலியே'... 'பரிதவித்த வங்கி மேலாளர்'... நெகிழ வைத்த சம்பவம்!
- 'தமிழகத்தின் இன்றைய (09-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- குட் நியூஸ்...! 'கொரோனா தடுப்பூசியிலே அது தான் இப்போ லீடிங்...' - இது முக்கியமா அவங்களோட உடம்புல தான் நல்ல பலன் தருது...!
- "கொரோனா காலத்தில் நர்சாக சேவை புரிந்த நடிகைக்கு என்ன ஆச்சு?".. ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியான ‘வைரல்’ பதிவு!