"எப்போது வரும் தடுப்பூசி... என்று ஒழியும் கொரோனா...???" - 'காத்திருப்பிற்கு இடையே'... 'WHO வெளியிட்டிருக்கும் நம்பிக்கை தகவல்!!!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து மகிழ்ச்சி செய்தி ஒன்றை உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலை 10 மாதங்கள் ஆகியுள்ள போதும் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை பல நாடுகளும் விதித்த போதும் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த  முடியாத நிலையே உள்ளது. இதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பல நாடுகளிலும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டங்களில் உள்ள தடுப்பூசிகள் எப்போது பொது மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதே தற்போதைய ஏக்கமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி எப்போது  கிடைக்கும் என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய  உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்