போதும் ‘லாக் டவுன்’ எல்லாம்... ‘60 வயசுக்கு’ மேலதான் ‘ஆபத்து’... மத்தவங்க ‘வேலைக்கு’ போங்க... ‘அதிபர்’ கருத்தால் பெரும் ‘சர்ச்சை’...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் லாக் டவுன் குறித்த பிரேசில் அதிபரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக் டவுன் தான் ஒரே வழி என பெரும்பாலான நாடுகள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ லாக் டவுனை கடுமையாக சாடிப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் அதிபர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “சில மாநிலங்களும், உள்ளூர் அதிகாரிகளும் இந்த லாக் டவுன் முறையை ஒழிக்க வேண்டும். போக்குவரத்தை முடக்குதல், வர்த்தகத்தை மூடுதல், மக்களை தனிமைப்படுத்துதல் இவையெல்லாம் தேவையா? நாம் நம்முடைய குடும்பத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டாமா? 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் ஆபத்து எனும்போது ஏன் பள்ளிகளை மூட வேண்டும்? செய்தி ஊடகங்களும் இதுகுறித்து குழப்பமான மனநிலையை தான் உருவாக்குகிறார்கள்.
மேலும் உஷ்ண நாடான பிரேசிலில் கொரோனா வைரஸால் எதுவும் செய்ய முடியாது. இந்த லாக் டவுனை உடனடியாக முடித்துவிட்டு நாம் நம் இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் பிரேசில் அதிபருடைய இந்த பேச்சுக்கு தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பிரேசிலில் இதுவரை 2201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதும், 46 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாட்டுல என்ன பிரச்சனை நடக்குது'...'சாலையில் இளம் பெண்கள் செஞ்ச செயல்'...வைரலாகும் வீடியோ!
- ‘எந்தெந்த’ பொருட்களை ஹோம் ‘டெலிவரி’ செய்யலாம்?... ‘எதையெல்லாம்’ டெலிவரி செய்யத் ‘தடை’... ‘சென்னை’ மாநகராட்சி ‘அறிவிப்பு’...
- ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிந்த மக்கள்.. தண்ணீரை பீய்ச்சி விரட்டிய அதிகாரிகள்..!
- இந்தியா முழுக்க 'எவ்ளோ பேரு மருத்துவ கண்காணிப்புல இருக்காங்க தெரியுமா?'... போர்க்களத்தில் நிற்கும் போர் வீரர்கள் 'இவர்கள்'... மத்திய அரசு உருக்கம்!
- ‘இதை’ பண்ணுங்க... அதிகபட்சமா ‘89 சதவீதம்’ வரை ‘கொரோனா’ பரவலை குறைக்கலாம்’... இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ‘தகவல்’...
- நிலைகுலைந்த நியூயார்க் நகரம்!... 'புல்லட் ரயில்' வேகத்தில் வைரஸ் பரவுகிறது!... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
- ‘வாசனை, சுவை ரெண்டையும் இழந்த மாதிரி இருக்கு’.. பிரபல அமெரிக்க பாடகருக்கு கொரோனா தொற்று உறுதி..!
- ‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...
- கொரோனாவின் மையப்பகுதியாக மாறும் அபாயம்!... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சுகாதார அமைப்பு!'... 45,000 பேருக்கு தொற்று!
- 'இவங்களால மத்தவங்களுக்கும் பரவும்'... 'எல்லாமே விளையாட்டா போச்சா'... எச்சரித்த அமைச்சர்!