என்னது பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இன்னொரு குழந்தையா?.. எப்படி சாத்தியம்?.. மருத்துவர்கள் சொல்லும் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > World news
By |

தாயின் கருவில் இருந்த குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா  நாட்டைச் சேர்ந்த 33 வயதான மோனிகா வேகா என்ற பெண் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்துள்ளார். இதனை அடுத்து வழக்கம் போல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மோனிகாவின் வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்ததில் கருவில் இருந்த சிசுவின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

இதனை அடுத்து அது உண்மையாகவே குழந்தைதானா என அறிந்துகொள்ள அல்ட்ராசவுண்ட் என்னும் பரிசோதனை செய்து பார்தததில் வயிற்றில் மற்றொரு சிசு வளர்ந்து வருவதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும் மிகச் சிறிய அளவாக இருந்த அந்த கரு வளர்ந்து கொண்டே இருந்துள்ளது.

இது மோனிகாவின் கருவில் உள்ள குழந்தையை சிதைத்துவிடும் என கருதி உடனடியாக அறுவைச் சிகிச்சையின் மூலம் பிரசவம் நடைபெற்று, தாயின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். இதனை அடுத்து குழந்தையின் வயிற்றில் இருந்த மற்றொரு சிசுவை லேப்ராஸ்கோப்பி உதவியுடன் நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். வெளியே எடுக்கப்பட்ட சிசு 2 இன்ச் நீளம் இருந்துள்ளது.

இதுபற்றி தெரிவித்த மருத்துவர்கள், கருவில் உள்ள குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை வளர்வதை fetus-in-fetu என அழைப்பதாக கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சுமார் 5 லட்சம் பிறப்புகளில் ஒருமுறை நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

BABY, FETUSINFETU, PREGNANCY, BIZARRE, VIRALNEWS

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்