ஸ்மார்ட்போன்லயும் வந்தாச்சு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் .. வாட்ஸ் ஆப்பின் புதிய வசதி!
முகப்பு > செய்திகள் > Technology newsஐ போன் பயனாளர்களுக்கு டச் ஐடி, ஃபேஸ் ஐடி பலவிதமான வசதிகள் ஏற்கனவே இருக்கின்றன. அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஐ போன் பயனாளர்களுக்கு நிகராக ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கும் பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட செயலிகள் இருக்கின்றன.
எனினும் பேஸ்புக் எனும் பெரிய ராஜ்ஜியத்தின் கீழ் ஒரு அங்கமாக இருக்கும் வெண்குடைதான் வாட்ஸ் ஆப். தனிநபர் தரவு கண்காணிக்கப்படுதல் தனிநபர் தரவுகள் திருடப்படுதல் உள்ளிட்ட பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் தற்போது துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக முன்னதாக பேஸ்புக் தெரிவித்திருந்தது.
அவற்றில் ஒரு பங்காக இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கென பிரத்தியேகமான சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தும், இதனை நிர்வகிக்க இந்தியாவிலும் தன் தலைமையை அமைத்தது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிய வசதியாக ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் செயலிக்குள் நுழைந்து தங்கள் கணக்கை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை Settings > Privacy Settings > Use Finger Print Sensor to Unlock என்கிற முறையில் நம் விருப்பத்தேர்வினை தேர்வு செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். எனினும் இந்த புதிய வசதி வாட்ஸ் அப்பில் பீட்டா வெர்ஷன் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. சிலரின் பீட்டா வெர்ஷன் பழையதாக இருந்தால் அதனையும் அப்டேட் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கருதப்படுகிறது.
OTHER NEWS SHOTS