‘ஏப்ரல் 2 ம் தேதிக்குள்ள எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணிக்கோங்க’.. அலர்ட் செய்த கூகுள் ப்ளஸ்!

முகப்பு > செய்திகள் > Technology news
By |

கூகுளின் ஒரு பகுதியான கூகுள் ப்ளஸின் சேவையை நிறுத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2011 ஆண்டு கூகுள் ப்ளஸ் என்னும் சேவை கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆரம்பத்தில் பயனாளர்களிடம் வரவேற்பை பெற்றாலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வருகையால் இதனின் மவுசு குறையத்தொடங்கியது.

மேலும் பாதுகாப்பு குறித்து பயனாளர்களின் புகார் தொடர்ந்து வந்ததை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 2 -ம் தேதி முதல் கூகுள் ப்ளஸ்-ன் சேவை முடிவுக்கு வருவதால் அதற்குள் கணக்கில் உள்ள போட்டோக்கள், வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள பயனாளர்களுக்கு கூகுள் அறிவுறித்தியுள்ளது.

GOOGLEPLUS, SHUTDOWN

OTHER NEWS SHOTS