‘உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை’.. சரியாவது எப்போது?

முகப்பு > செய்திகள் > Technology news
By |

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் சேவை பாதிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்ட சமூக வலைதளமான பேஸ்புக், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல இடங்களில் அதனின் சேவை முடங்கியது.

இந்தியா மட்டுமல்லாமல், இங்கிலாந்து, டெக்சாஸ், சீட்டல், வாஷிங்டன், லத்தின், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் போன்ற வலைதள கணக்குகள் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை லாக் அவுட் செய்யாத பயனர்களின் கணக்குகள் பயன்படுத்த முடிந்ததாகவும், லாக் அவுட் செய்துவிட்டு மீண்டும் லாக் இன் செய்யும் போது தான் இது போன்ற பிரச்சனை ஏற்படுவதாக பயனளார்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பயனர்கள் புகார் அளிக்க தொடங்கியதும், கோளாறுகள் சரி செய்யபட்டு வருவதாகவும், தொழில்நுட்பக் கோளாறுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் தங்களது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

FACEBOOKDOWN, INSTAGRAMDOWN, WHATSAPPDOWN, TECHNOLOGY

OTHER NEWS SHOTS