'உன்ன உள்ள விடமுடியாது'...'வெளியே போ'...பிரபல மாலில் நடந்த கொடுமை...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை பிரபல மாலில் அனுமதிக்காமல், கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவகங்களில் நேரடியாக சென்று சாப்பிடுவதை விட ஜொமோட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகள் மூலமாக உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. மற்றவர்களின் பசியினை போக்குவதற்காக,சாலையில் மின்னல் வேகத்தில் இந்த டெலிவரி பாய்ஸ்கள் பறப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.இந்த நிலையில்  டெலிவரி ஊழியர் என்ற ஒரே காரணத்துக்காக `ஜொமோட்டோ' ஊழியர் ஒருவரை புதுச்சேரி ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல் கட்டாயப்படுத்தி வெளியேற்றிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஷாப்பிங் மாலில் நுழையும் ஜொமோட்டோ ஊழியரை உள்ளே செல்ல கூடாது என அந்த வணிக வளாகத்தின் ஊழியர் ஒருவர் தடுக்கிறார்.அதற்கு நான் ஏன் செல்லக் கூடாது? உணவு டெலிவரி எடுக்கச் செல்கிறேன் என அவர் கூறுகிறார்.அப்போது வணிக வளாகத்தின் ஊழியர் அந்த டீ ஷர்ட்டை நீங்கள் கழற்றிவிட்டால் உங்களுக்கு இங்கு தனி மரியாதை” என்கிறார் வணிக வளாகத்தின் ஊழியர்.

அதற்குள் அங்கு விரைந்து வரும் வணிக வளாகத்தின் மற்றொரு ஊழியர் ''எதற்கு சத்தம் போடுற'' என ஜொமோட்டோ ஊழியரை வலுக்கட்டாயமாக ஷாப்பிங் மாலில் இருந்து அந்த ஊழியர்கள் வெளியேற்றுகிறார்கள்.நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஜொமோட்டோ' ஊழியர் தனது மொபைலில் படம்பிடித்துள்ளார்.

ஆர்டர் செய்த உணவை எடுக்க வந்த ஊழியரை ஆடையைக் காரணம் காட்டி,மனிதத்தன்மை இல்லாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

TWITTER, ZOMATO, PONDICHERRY, SHOPPING MALL

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்