சென்னையில் 361 பாதசாரிகளை கொன்றது யார் ?.. அவசரமா?.. அலட்சியமா?.. பொறுமையின்மையா..?

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

இன்றைய நிலையில், உலக முழுவதும் உள்ள மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும் இதற்கு முக்கிய காரணங்களாகின்றன. இதன் விளைவாக தினம்தினம் சாலை விபத்துக்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட சாலைகள் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருந்தாலும் விபத்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை. இந்த வருடம் சென்னையில் நடந்த சுமார் 2030 சாலை விபத்துக்களில் 361 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 -ஆம் ஆண்டு மட்டும் சென்னையில் நடந்த சாலை விபத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள், பள்ளிகள் என நிறைந்திருக்கும் பழைய மகாபலிபுரம்(OMR) சாலையில்தான் அதிக விபத்துக்கள் நடப்பதாக கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு மட்டும் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் ஏற்படுத்திய விபத்தில் 29 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் வேளச்சேரி, அண்ணா சாலை, ECR உள்ளிட்ட இடங்களிலும் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தெரிவித்த காவல் உயர் அதிகாரி, சாலை விதிகளை பலரும் மதிக்காமல் செல்வதாலேயே அதிக விபத்துகள் ஏற்படுவதாக கூறியுள்ளார். மேலும் சாலையைக் கடக்கும் பாதசாரிகள் டிராபிக் சிக்னலை மதிக்காமல் செல்வது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிக் கடப்பது, போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.

பெருகி வரும் நகரமயமாதலின் விளைவாக நாளொன்றுக்கு சாலை விபத்துக்கள் தொடந்து நடந்துகொண்டே இருக்கின்றன. பொறுமையின்மை, சீக்கிரமாக செல்லவேண்டும் என்கிற அவசரம், இதனால் விலை மதிப்பற்ற தங்களது உயிரை இலக்க நேரிடுகிறது.

CHENNAI, TRAFFIC, TRAFFICADVISORY, ACCIDENT

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்