பிறந்தநாளன்று ‘கம்பேக் கொடுத்த விஜயகாந்த்’.. ‘களைகட்டிய கொண்டாட்டங்கள்’.. ‘உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை அவரது கட்சியினரும் ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
சினிமாவிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் விஜயகாந்த். ரசிகர்களால் கேப்டன் என அழைக்கப்படும் இவர் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தவர். விஜயராஜ் என்ற தனது இயற்பெயரை இவர் சினிமாவிற்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். 1979ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் கால் பதித்த விஜயகாந்த் அதிலும் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளார். இந்நிலையில் உடல்நிலை காரணமாக பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்துவந்தவர் அவரது 67வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டுள்ளார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளிக் குழந்தைகள் அவருக்கு இனிப்புகளை ஊட்டிவிட அவர்களுடன் சேர்ந்து விஜயகாந்த் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
விழாவில் பேசிய கட்சியின் துணை பொது செயலாளர் சுதீஷ், “ஆண்டுதோறும் விஜயகாந்தின் பிறந்த நாள் விழாவில் ஏதேனும் ஒரு மக்கள் நல திட்டம் தொடங்கப்பட்டு அதனை தேமுதிக செயல்படுத்தி வருகிறது” எனக் கூறியுள்ளார். பின்னர் பேசிய பிரேமலதா, “விஜயகாந்த் பூரண உடல் நலனுடன் இருக்கிறார். அவர் தலைமையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இது ஒன்னு போதும் தலைவா’.. ‘மனசுல நின்னுட்டீங்க’.. வைரலாகும் வீடியோ..!
- ‘பிறந்தநாள் கொண்டாடிவிட்டு’ திரும்பிய பெண்ணை.. ‘கடத்திச் சென்ற கும்பல் செய்த..’ நடுங்க வைக்கும் காரியம்..
- அவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’
- பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது.. ‘துப்பாக்கி முனையில் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’
- ‘யாரக் கேட்டு கேப்டனா இருக்காரு..?’ எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான்.. விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..
- ‘என்னை யாரும் இப்படி அவமானப்படுத்தியது இல்லை..’ விமான நிலைய அதிகாரிகள் மீது பிரபல முன்னாள் வீரர் குற்றச்சாட்டு..
- ‘சீனியர்களை நம்பியதே தோல்விக்குக் காரணம்..’ உலகக் கோப்பைக்குப் பிறகு மனம் திறந்துள்ள கேப்டன்..
- 'இது தந்தையின் தாலாட்டு'.. குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு தந்தையின் 'இப்படி' ஒரு பரிசு!
- ‘இனி கேப்டனும் பயிற்சியாளருமே இதில் முடிவெடுக்கலாம்..’ குழு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிசிசிஐ..
- 'சின்ன வயசுலேர்ந்து விளையாடுறோம்.. இந்த 15 நாட்கள்'.. 'ஹாப்பி பர்த்டே டாடி'.. சச்சினின் நெகிழவைக்கும் ட்வீட்!