"ராணுவத்துல இருந்து வந்த புதுசுல கோயில் திருவிழால சாப்ட்டேன்.. CITY-ல மட்டன் சாப்பிட போனா இந்த பயம் இருக்கு.!" - நடிகர் வேல.ராமமூர்த்தி ருசிகர பேட்டி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனக்கு பிடித்த உணவு குறித்து எழுத்தாளர் வேல‌. ராமமூர்த்தி, நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "விபத்து நடந்ததுக்கு அப்புறம் இப்டித்தான் இருந்துச்சா".. 35 வருஷம் கழிச்சு வெளியான டைட்டானிக் கப்பலின் வீடியோ!!

தமிழ் இலக்கிய சூழலில் பிரபல எழுத்தாளராக வலம் வருபவர் வேல. ராமமூர்த்தி. தமிழ் சினிமாவில் குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

குறிப்பாக மதயானைகூட்டம், சேதுபதி, கிடாரி, கொம்பன், பாயும் புலி, வனமகன், அறம், அண்ணாத்த ஆகிய படங்கள் முக்கியமானவை.

கிடாரியில் இவர் செய்த கொம்பையா பாண்டியன் கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம் என்றால் மிகையாகாது. கமுதி பெருநாழியைச் சார்ந்த எழுத்தாளர் வேல. ராம மூர்த்தி. இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.

இவர் எழுதிய குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட தமிழ் நாவல்கள்  புகழ்பெற்றவை. மேலும் இவர் எழுதிய சிறுகதைகளும் புகழ் பெற்றவை.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பிராண்மலை படத்தின் "இளந்தாரி பய" வசனம் இவரை ரசிகர்கள் டிரெணடாக்கி வருகிறது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை வேல. ராமமூர்த்தி அளித்துள்ளார்.

அதில் தனக்கு பிடித்த உணவு குறித்து எழுத்தாளர் வேல‌. ராமமூர்த்தி பேசினார். "எனக்கு மட்டன் குழம்பு ரொம்ப பிடிக்கும். மீன் குழம்பு சட்டி காலி ஆகுற வரை சாப்பிடுவேன். அதுவும் பழைய மீன் குழம்பு. அவ்வளவு ருசியாக இருக்கும். ஆட்டுக்கறி அதோட கொழுப்பு சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். முட்டை மஞ்சள் கரு, உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிடுவேன். பிராய்லர் கோழியை தொடவே மாட்டேன். எப்போதும் வென்றான் ஊர்ல சோலையப்பன் கோயில்ல சித்திரை மாதம் திருவிழால 3 கிலோ ஆட்டுக் கறி, 1 கிலோ ஆட்டு ரத்தப்பொரியல் ராணுவத்தில் இருந்து வந்த புதுசுல சாப்பிட்டு இருக்கேன். நகரங்களில் ஆட்டுக் கறி சாப்பிட மாட்டேன். ஆட்டுக்கறினு என்னத்தையாவது கலந்துடுவான்னு பயம். நாட்டுக் கோழி மாதிரி பண்ணைக் கோழி இருக்கும். அது நகரத்து ஆளுகளுக்கு தெரியாது. நமக்கு அது சாப்பிடும் போதே தெரிஞ்சுடும்." என வேல. ராமமூர்த்தி பேசினார்.

Also Read | காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதலர்கள்.. சோகத்தில் முடிந்த காதல் பயணம்.. கலங்கிப்போன குடும்பத்தினர்..!

VELA RAMAMOORTHY, VELA RAMAMOORTHY ABOUT HIS FAVOURITE FOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்