“விஜய் தான் சூப்பர் ஸ்டார்” - சீமான்.. “சூப்பர் பெருசா? சுப்ரீம் பெருசா?” - கேள்வியால் டென்சன் ஆன சரத்குமார்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது.

“விஜய் தான் சூப்பர் ஸ்டார்” - சீமான்.. “சூப்பர் பெருசா? சுப்ரீம் பெருசா?” - கேள்வியால் டென்சன் ஆன சரத்குமார்
Advertising
>
Advertising

Also Read | “உதயநிதியும் எம் புள்ள தான்”.. மதுரையில் பெரியப்பா எம்.கே.அழகிரியை சந்தித்த அமைச்சர் உதயநிதி.!!

11 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.

Varisu Sarath kumar answer about super Star related questions

வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார்.

மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார்.

மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வாரிசு  படத்தின் நன்றி அறிவிப்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் புறப்பட்டு செல்லும்போது நடிகர் சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சில கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.  அப்போது பேசிய சரத்குமார், "சூப்பர் ஸ்டார் டைட்டில் விஷயத்தை பெருசாக்கி உலகின் பெரிய விஷயமா பண்ணாதீங்க. என் மகனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார். எனக்கு எங்க அப்பா சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார்னா டைட்டில். நான் அடுத்த முதல்வர், பிரதமர் என்று சொல்லவில்லை. சூப்பர் ஸ்டார் பெருசா? சுப்ரீம் ஸ்டார் பெருசா? மெகா ஸ்டார் பெருசா? அல்டிமேட் ஸ்டார் பெருசா? இதெல்லாம் பிரச்சினை ஆக்காதீங்க. பட்டத்தை தான் எல்லாம் பாக்குறீங்களா? மனுசனை பாக்குறதில்லையா?. வரும் 24 ஆம் தேதி இது குறித்து விரிவாக பேசலாம்" என சரத்குமார் ஆவேசமாக பதில் அளித்தார்.

மேலும் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தான் தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | மதுரையில் நடிகர் சூரியுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவை கண்டுகளித்த அமைச்சர் உதயநிதி.!!

VARISU, SARATH KUMAR, SUPER STAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்