மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய வைகோவின் போராட்டத்தில் கல்வீச்சு!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருவதையொட்டி நெல்லை காவல் கிணறுவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் இந்த கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் வேறு சில நபர்கள் கற்கள் வீசியதால் அந்நபர்களை மதிமுகவினர் விரட்டிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு எழுந்ததோடு, போலீஸார் இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முதலில் இந்த போராட்டத்தின் ஒரு நிகழ்வாக நெல்லை காவல் கிணறுவில் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் கருப்பு பலூனை வைகோ பறக்கவிட்டார். ஒவ்வொரு முறை மோடி தமிழ்நாட்டுக்கு வரும்பொழுதும் வைகோ கருப்புக் கொடி காட்டுவதும், #GoBackModi #TNWelcomesModi உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆவதும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிரதமர் மோடி திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி வருவதாகக் கூறப்படும் வேளையில், கன்னியாகுமரி எல்லையில் உள்ள காவல் கிணற்று அருகே வைகோ கருப்பு கொடி காட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

NARENDRAMODI, VAIKO, PROTEST, KANYAKUMARI

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்