"உதயநிதி ஸ்டாலின் எனும் நான்".. இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

Advertising
>
Advertising

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று பொறுப்பேற்றார். ஆளுநர் ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் & ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறையில்  வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை என  பலகை வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கடந்த 2009-ல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில்  56-வது வயதில் உள்ளாட்சி துறை அமைச்சரானார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தன் 46-வது வயதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகி உள்ளார்.

MKSTALIN, TAMILNADUASSEMBLY, UDHAYANIDHI STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்