'தென் மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு?'... 'அரசு அறிக்கை கூறும் தற்போதைய நிலவரம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு அறிக்கையின் படி தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முன்னதாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அரசு அறிக்கையின் படி கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 5,820 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 26 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 182 பேர் குணமடைந்துள்ளனர், 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 3,620 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 2,136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார், 311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,210 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 6,311 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 1,838 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியில் நேற்று மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,564 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 40 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து மொத்தம் 1,662 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 866 பேர் சிகிச்சையில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 175 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 5,610 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்