20 அடி உயரத்தில் இருந்து அருள்வாக்கு வழங்கிய பூசாரி தவறி விழுந்து பலியான சோகம்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய கோவில் பூசாரி ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் வாட்ஸ் அப்பில் அதிவேகமாக பரவி வருகிறது.

கோவையைச் சேர்ந்த சுண்டக்காமுத்தூரில் அய்யாசாமி திருக்கோயில் பிரசித்தி பெற்றது. இதே பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர் இக்கோயிலின் பூசாரியாக இருந்து வருகிறார். இக்கோயிலில் அமாவாசை, பௌர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் மகா சிவராத்திரி அன்று நள்ளிரவில் பூசாரி அருள்வாக்கு சொல்வதும் உண்டு. அந்தவகையில் இந்த வருட மகா சிவராத்திரி அன்று அருள்வாக்கு சொல்வதற்காக, 20 அடி உயர கம்பத்தில் ஏறியுள்ளார் அய்யாசாமி.

பக்தர்கள் கூடியிருக்கும் நள்ளிரவில் உயரமான கம்பத்தில் இருந்து அருள்வாக்கினை கூறிய நேரத்தில் எதிர்பாராத விதமாக மேலேயிருந்து கீழே விழுந்துள்ளார். படு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அய்யாசாமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பூசாரி கீழே விழுந்த சம்பவம் வீடியோவாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் குருக்கள் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

ACCIDENT, BIZARRE, SAD

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்