மாணவியின் பொதுத் தேர்வுக்காக, பாட்டியின் இறுதிச் சடங்கை தள்ளிவைத்த உறவினர்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் முக்கியமாக மன அழுத்தமின்றி தேர்வுகளை எதிர்கொள்வது அவசியமாகிறது.

பலதரப்பட்ட சந்தர்ப்ப  சூழலில், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே பலரின் கண்காணிப்புகளுக்கு நடுவே பொதுத்தேர்வெழுதும் மாணவர்களை பொருத்தவரை, தங்களது அடுத்த பல வருட வாழ்க்கையும் வேலையமைப்பும் அதற்கான மேற்படிப்புகளும் அதைப்பொருத்தே அமைகின்றன.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் தன் பாட்டி இறந்துள்ள நாளான இன்று அதே ஊரின் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த தேர்வினை எழுத வந்துள்ளார்.  தேர்வெழுதும் முதல் நாள் இரவே இறந்த அவரது பாட்டியின் பிரேதத்தை, அவரது பேத்தியான இந்த மாணவி தேர்வினை எழுதும் வரை அடக்கம் செய்வதற்கான சடங்குகளை அவரது உறவினர் தள்ளி வைத்துள்ளனர்.

மாணவி தேர்வெழுதி முடித்துவிட்ட பிறகே, அவரது பாட்டியின் பிரேதம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. காரணம் பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவியின் மனநலம் அழுத்தத்தை சந்திக்கக் கூடாது என்பதுதான் என்று கூறப்படுகிறது. இதேபோல், தூத்துக்குடியில் மாணவி ஒருவர் பொதுத் தேர்வெழுதிக் கொண்டிருக்கும்போது தந்தை இறந்துவிட்ட செய்தி வந்த பிறகும் கூட தேர்வினை முழுமையாக எழுதிவிட்டுச் சென்றுள்ளார்.

குறிப்பு: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது சித்தரிப்புப் படம்.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்