“நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... இல்லத்தரசிகளுக்கு அரசு சம்பளம் கொடுப்போம்...!” - அதிரடி அறிவிப்புகள் வெளியிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி! - யாரு சாமி அவங்க???

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு அரசு சம்பளம் கொடுப்போம் என தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி ஒன்று அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், மற்ற அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக பரப்புரையை தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், "மக்கள் நீதி மய்யத்தை நான் தொடங்கியபோது இது தேறாது, நான் தேற மாட்டேன் என சொன்னவர்கள் பலரும் இப்போது என்னை பார்த்து பயந்து கொண்டிருக்கிறர்கள்.

நான் அரசியலுக்கு வந்த பிறகு பலருக்கு தூக்கம் போய்விட்டது. தனிப்பட்ட என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு வியப்பை அளிக்கிறது. என்னை சிலர் எதிரிகளாக நினைக்கிறார்கள். ஆனால் நான் அவர்களை எதிரிகளாகவே நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். தமிழகமும் அவர்களை அப்படித்தான் பார்க்கிறது. பிக்பாஸ் நடத்துபவர் எல்லாம் கட்சி நடத்த முடியுமா என என்னிடம் கேட்கிறார்கள். பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது. பிக்பாஸ் மூலம் நான் மக்களை மகிழ்விக்கிறேன்.

பிக்பாஸில் எத்தனையோ நல்ல விஷயங்கள் சொல்கிறோம். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை என நினைக்கிறேன். ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது என சொல்கிறோம். அதெல்லாம் அவர்களுக்கு பிடிக்கவில்லை. தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் தரப்போகிறார்கள். மக்களின் பணத்தை எடுத்துக் கொண்டு அதையே திருப்பித் தருகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மக்களின் பணத்தை 10 மடங்குக்கு மேல் எடுத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு சதவிகிதத்தை தான் தருகிறார்கள்.

வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என எத்தனையோ பணிகள் உள்ளது. அதனால் அவர்களுக்கும் அரசு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது எனது கருத்தாகும். இது சாத்தியமுள்ள செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டமே ஆகும். இதுபோல ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளன. வேலை தேடும் இளைஞர்களை வேலை தரக்கூடிய முதலாளிகளாக மாற்றுவோம். வெற்றியை நோக்கிய நமது பயணம் துவங்கிவிட்டது. நாளை நமதே" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்