வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000.. எப்படி பெறுவது.. விபரம் உள்ளே?

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

தமிழக அதிமுக அரசின் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மிக அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த அந்த பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள் செயல்படுத்தப்படத் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகளால் சிரமப்படும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு ரூ. 2000 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவியாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, விசைத்தறி தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள்,கட்டுமானத் தொழிலாளர்கள்,  கைவினைஞர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் பலதரப்பட்ட தொழில்களைப் புரியும் ஏழை எளிய மக்கள், தினக்கூலி மற்றும் பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அதிமுக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த நிதி உதவியைப் பெற மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு நகல்களை இணைத்து கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசாக அனைவருக்கும் ரூ. 1000 சிறப்பு பொங்கல் பரிசுக்கான் நிதியாக கொடுக்கப்பட்டது. அதுசமயம், அரச கருவூலத்தில் இருந்து மக்களுக்கு பணம் கொடுத்தலைத் தவிர்க்கச் சொல்லி, வேண்டுமானால் கட்சி நிதியில் இருந்து எடுத்து மக்களுக்கு பணத்தை வழங்கச் சொல்லி நீதிமன்றம் ஆலோசனை கூறியது. ஆனால் அதற்குள் பலருக்கும் அந்த பொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்