விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது.. முதல்வர் கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

விமானி அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 -க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பு நடத்தியதாக பொறுப்பேற்றது.

இதனை அடுத்து இந்திய விமானப்படை மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் சுமார் 1000 கிலோ அளவுள்ள வெடிகுண்டுகளை, காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பால்கோட் என்னுமிடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது வீசியது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அப்போது விமானப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இதனால் உலக நாடுகள் அபிநந்தனை விடுதலை செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. இதனை அடுத்து விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. தற்போது அபிநந்தன் மருத்துவ பரிசோதனையில் உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ABINANDHANVARTHAMAN, PARAMVIRCHAKRA, TNGOVT, EDAPPADIPALANISAMY, NARENDRAMODI

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்