'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா???'... 'இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா???'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!!!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இங்கிலாந்திலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த வாரம் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. இருப்பினும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக பலரும் அந்நாட்டில் இருந்து பயணம் மேற்கொண்டதால் பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பரவியுள்ளதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.



மேலும் இங்கிலாந்தில் இருந்து வந்த பலருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள போதும் அது உருமாறிய கொரோனாவா என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த சிலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது உருமாறிய கொரோனா வைரசா என்பது குறித்த பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது உருமாறிய கொரோனா வைரசா என்பது குறித்த பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உருமாறிய கொரோனா பரவியுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்கும். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்