‘போலீஸ் சீருடையில் டிக்டாக் வீடியோ’.. வைரலான காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

காவலர் சீருடையில் சினிமா பாடலுக்கு நடனமாடும் காவலர்களின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இன்றைய இணையை சூழலில் ஸ்மார்ட் போன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளில் வந்துவிட்டது. இதனால் சில நன்மைகளும் பல பாதகமான செயல்களும் நடைபெற்று வருகின்றன. சமீப காலமாக டிக்டாக் என்னும் செயலி பிரபலமாகி வருகிறது.

இந்த டிக்டாக் வீடியோக்களால் சமுதாய சீர்கேடு நடப்பதாக கூறி தமிழக அரசு டிக்டாக் செயலியை தடைசெய்வது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து டிக்டாக் செயலியில் சில பாதுகாப்பு குறித்த மாற்றங்களைக் கொண்டு வருவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்தது.

முன்னதாக காவல் நிலையம், காவலர் வாகனம் உள்ளிட்டவற்றை பின்புலமாக வைத்து பலர் டிக்டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இதனை அடுத்து காவல் துறையினர் அவர்களின் மீது நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் காவலர் உடையில் ஒரு ஆண் மற்றும் பெண் சினாமா பாடலுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராயும் வகையில் காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

TAMILNADU, TIKTOK, VIRALVIDEO, TNPOLICE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்