மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி அழைப்பை நிராகரித்த கட்சி.. நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணி அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நிராகரித்துள்ள சம்பவம் அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வருவதை ஒட்டி தமிழகத்தில் அரசியல் கள நிகழ்வுகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதன் முதல் கட்டமாக அதிமுக தலைமையில் பாமக மற்றும் பாஜக இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு முடிவடைந்ததை நடிகர் கமல்ஹாசன் கொடி ஏற்றி கொண்டாடியதோடு, யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கப்போவதாகவும், அதுதான் தங்கள் பலம் என்றும் கூறியதோடு, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நிற்கப்போவதாகவும் அறிவித்தார்.

இதற்கடுத்த நடவடிக்கையால் நடிகர் கமல்ஹாசன், டெல்லி சென்று, அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பிரகாஷ் காரத்தையும் சந்தித்தார். மேலும் அந்த சந்திப்பில் அரசியலே இல்லை என்று கூறிவிடமுடியாது என கூறினார்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கமல் கூட்டணிக்கு அழைத்துள்ளதாக தெரிந்தது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சிதம்பரத்தில் அண்மையில் பேசிய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு அழைத்ததை உறுதி செய்ததோடு, தமிழ்நாட்டைப் பொருத்தவரை தங்களது கட்சி திமுகவுடன்  கூட்டணி அமைக்கவிருப்பதாகவும், ஆகையால் நாம் நண்பர்களாக இருப்போம் என கமலிடம் சொல்லிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

KAMALHAASAN, MNM, LOKSABHAELECTIONS2019

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்