'தீபாவளி தினம் முதல் 4 நாட்களுக்கு'... 'இந்த மாவட்டத்தில் மட்டும்’... ‘மதுக்கடைகள் மூடல்’... ‘வெளியான அறிவிப்பு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தீபாவளி தினமான 27-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மதுரையில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27-ம் தேதி சிவகங்கையில், மருது பாண்டியர் நினைவு நாளும், வரும் 30-ம் தேதி ராமநாதபுரத்தில், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடைப்பெறுகிறது. இதையொட்டி அண்டை மாவட்டமான மதுரையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தீபாவளித் தினமான ஞாயிற்றுக்கிழமை 27-ம் தேதி முதல், 28, 29, 30 ஆகிய 4 நாட்களுக்கு அனைத்து விதமான மதுக்கடைகளும் அடைக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

இந்த 4 நாட்களில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மது அறுந்தகம், படை வீரர்கள் கேண்டீனிலும் மது விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்களை காண்காணிக்கவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த 4 நாட்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TASMAC, LIQUOR, MADURAI, DEVAR, POOJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்