‘திருமணத்துக்கு உடன்படாத பள்ளி மாணவியை..’: பெற்றோர்கள் எடுத்த முடிவு.. தங்கையின் சமயோஜிதம்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

திருமணம் செய்துகொள்ள உடன்படாத மைனர் மாணவிக்கு பெற்றோர்களே உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக அவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அருகே உள்ள அரசுப்பள்ளி ஒன்றில், 11-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி மேற்படிப்பு படிக்க நினைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு 3 சகோதரிகள் இருப்பதாலும், அவரது பெற்றோர்கள் வயதானவர்கள் என்பதாலும், அம்மாணவிக்கு 16 வயதே ஆன நிலையில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்ததாகவும் அதற்கு மாணவி உடன்படவில்லை எனவும் தெரிகிறது.

இதனை அடுத்து மாணவியை கண்டித்தும், கெஞ்சியும், மிரட்டியும் என பல்வேறு வழிகளிலும் மாணவியை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க அவரது பெற்றோர்கள் முயற்சித்துள்ளனர். ஆனாலும் திருமணத்துக்கு சம்மதிக்காத, மாணவியின் எதிர்காலத்தை பற்றிய கோழைத்தனமான பயத்தாலும், மகள்(மாணவி) மீது ஆத்திரமும் கொண்ட பெற்றோர்கள் மாணவியின் மதிய உணவில் விஷம் கலந்து கொடுத்தனுப்பியுள்ளனர்.

ஆனால் இதை எப்படியோ தெரிந்துகொண்ட மாணவியின் தங்கை, அம்மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் சென்று அவரை மறித்து மதிய உணவில் விஷம் கலந்ததைச் சொல்லியிருக்கிறார். பெற்றோர்களின் செயலைக் கேட்டு அதிர்ச்சியும், ஆனால் தங்கையின் பாசம் கண்டு நெகிழ்ச்சியும் அடைந்த மாணவி, உடனே தாமதிக்காமல் அந்த மதிய உணவுடன் நேராக  அருகில் இருந்த மகேந்திரமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

இவ்வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்ட போலீஸார், மாணவியின் பெற்றோரை விசாரித்ததில் உணவில் விஷம் கலந்தது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்,  குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு மற்றும் போலீஸாரின் விசாரணையின் பேரில் உண்மையை ஒப்புக்கொண்ட பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, மாணவியின் 3 சகோதரிகள் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பின் கீழ் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

SCHOOLSTUDENT, CHILDMARRIAGE

OTHER NEWS SHOTS