திமுக வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் கவிஞர், பாடலாசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இன்னும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக.

இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை அறிவித்துள்ளது. இதில் கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியனும் இடம் பெற்றுள்ளார்.

திமுக முதன்மைச் செயலாளரான டி.ஆர்,பாலு ஸ்ரீபெரும்புதூரிலும், முன்னாள் மத்திய அமைச்சரும் முரசொலி மாறனின் இளைய மகனுமான தயாநிதி மாறன் 4-வது முறையாக மீண்டும் மத்திய சென்னையிலும், ஆற்காடு வீராசாமியின் மகனான டாக்டர் கலாநிதி, வட சென்னையில் முதல் முறையாகவும், தற்போதைய வாலாஜாபாத் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் ஜி.செல்வம், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலும், போட்டியிடுகின்றனர். இன்னும் பலர் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் விபரங்களும் வெளியாகியுள்ளன.

இவர்களுடன் தென் சென்னையில் திமுக அணியின் சார்பில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர் தமிழச்சி தங்க பாண்டியன். முன்னாள் அமைச்சர் வி.தங்கபாண்டியனின் மகளான த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த இவர், அடிப்படையில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பின்னர் சென்னை குயின்மேரீஸ் கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.  இவர் தமிழக அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் சகோதரி ஆவார். இவரது கணவர் ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகர் ஆவார்.

எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சணத்தி ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியவர். சீரிய இலக்கிய வெளியிலும் சீரியசான இலக்கிய வெளியிலும் இயங்கி வரும் இவர், இயக்குநர் மிஷ்கன் இயக்கிய பிசாசு படத்தில்‘நதி போகும் கூழாங்கல் பயணம்’ என்கிற பாடலை எழுதியவர். மல்லிப்பூவும் மகிழ்ச்சியான முகமும், கண்கவரும் பாரம்பரிய ஆடையணிகலன்களும் இவரது தனிப்பெருமடையாளங்கள். இவர் இந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வின் சார்பில் தென் சென்னையில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.

MKSTALIN, DMK, LOKSABHAELECTIONS2019, BATTLEOF2019, THAMIZHACHITHANGAPANDIYAN

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்