‘டக்குன்னு நிறுத்துனா நரம்புத் தளர்ச்சி வந்துடும்: குடிப்பவர் நலன் கருதி படிப்படியாக..’ அதிமுக அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

தமிழத்தில் மது விற்பனையை அரசே ஏற்று நடத்துவது பற்றிய விமர்சனம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

பல்வேறு தரப்பினரின் நூதனமான போராட்டங்கள், குறைந்த பட்சம், குடிமக்கள் வசிக்கும் பகுதிகளிலும், பள்ளி கல்லூரிகள் இருக்கும் ஏரியாக்களிலும் இருக்கும் மதுக்கடைகளை அகற்றக் கோரியும் போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் அந்த இடங்களில் இருந்து காலி செய்யப்படும் மதுக்கடைகள் வேறு இடங்களுக்கு நகருமே தவிர, முழுமையாக இழுத்து மூடப்படாதவையாக இருக்கும்.

பலரும் குடித்துவிட்டு குடும்ப மற்றும் சமூக பொறுப்புகளின்றி தங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்வதால், அவர்களின் குடும்பங்கள் பாடாய்ப் படுவதாகச் சொல்லி, கோவன் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்களும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனாலும் பண்டிகை நாட்களில் டார்கெட் செய்து விற்பனை செய்யப்படும் அரசு மதுபானக் கடைகளில் வருமானம் நிர்ணயித்த இலக்கைத் தாண்டி அபாரமாக வசூலில் குவிப்பதை பார்க்க முடியும். கேரளாவில் பூரண மதுவிலக்குக்கான ஏற்பாடுகள் எப்போதோ தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசே ஏற்று நடத்துவதால் பூரண மதுவிலக்கு சாத்தியமா என்கிற கேள்விக்குறி இருந்தது. இந்த சூழலில், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, திடீரென குடிப்பதை நிறுத்திவிட்டால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்கிற காரணத்தால், மதுவிலக்கினை உடனடியாக அமல்படுத்த முடியாது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆகையால் குடிக்கிறவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டி உள்ளது, எனவே மதுவிலக்கினை படிப்படியாகக் கொண்டுவரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

AIADMK, TASMAC, RAJENDRABALAJI

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்