தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்ரமணிய சுவாமி! குழப்பத்தில் பாஜக நிர்வாகிகள்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

 

தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்ரமணிய சுவாமி! குழப்பத்தில் பாஜக நிர்வாகிகள்!

நாடாளுமன்றம் மற்றும் இடைத் தேர்தல்களில் அமமுக வேட்பாளர்களுக்கு ‘குக்கர் சின்னம்' ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன். அதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த நிர்வாகி, சுப்ரமணியன் சுவாமி தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதில், தினகரனுக்கு பொதுச் சின்னம் வழங்க மறுப்பது தவறானதாகும் என்றும். மேலும், தேர்தல் ஆணையம் தான், யாருக்கு எந்தச் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும். அதே நேரத்தில் தினகரனுக்கு பொதுச் சின்னம் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் தொடர்ந்து இதில் இழுபறியாவது சரியல்ல என்றும்  தினகரனுக்கு ஆதரவாக சுப்ரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தினகரன், அளித்த பேட்டியில் ‘எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார், மேலும், இன்று முதல் தீவிர பிரசாரத்தை ஆரம்பிக்க போவதாகவும். ராயபுரத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்க உள்ளதாகவும். இதற்கு பின்னர் எந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டாலும் அது எங்கள் கட்சியின் வெற்றிச் சின்னமாக தான் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

LOKSABHAELECTIONS2019, AMMK, SUBRAMANIA SWAMY

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்