எதுகை மோனையில் கவிதை மற்றும் பஞ்ச் வசனங்களால் பிரச்சாரத்தை அமர்களப்படுத்திய மு.க.ஸ்டாலின்! அப்படி என்ன கவிதை?

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

 

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரையில் போட்டியிடுகிறது. இந்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது தமிழக முதலமைச்சர் பழனிசாமி குறித்தும், மோடி குறித்தும் ஸ்டாலின் எதுகை மோனையில் கவிதை வாசித்தார். அதாவது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதன் சுருக்கமே அந்த கவிதை ஆகும்.

கவிதை பின்வருமாறு,

இது பொல்லாத ஆட்சி, அதற்கு பொள்ளாச்சியே சாட்சி

இது துப்புக்கெட்ட ஆட்சி, அதற்கு தூத்துக்குடியே சாட்சி

இது தரிசாக்கும் ஆட்சி, அதற்கு நெடுவாசலே சாட்சி

இது மனுதர்ம ஆட்சி, அதற்கு நீட் தேர்வே சாட்சி

இது பாலைவன ஆட்சி, அதற்கு மேகதாதுவே சாட்சி

இது ஊழல் ஆட்சி, அதற்கு ரஃபேலே சாட்சி

இது நாணயங்கெட்ட ஆட்சி, அதற்கு செல்லாத நோட்டே சாட்சி

இது கொள்ளைக்கார ஆட்சி, அதற்கு ஜிஎஸ்டியே சாட்சி

இது மதவெறி ஆட்சி, அதற்கு மாட்டுக்கறியே சாட்சி

இது கொலைகார ஆட்சி, அதற்கு கொடநாடே சாட்சி

இது வாயில் வடைசுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி

இது எடுபிடி ஆட்சி, அதற்கு எடப்பாடியே சாட்சி.

பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், இது அவரது நண்பர் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய கவிதை என்று குறிப்பிட்டார். இந்நிலையில், இறுதியாக “ஜாடிக்கேற்ற மூடியாகவும், மூடிக்கேற்ற ஜாடியாக மோடியும் எடப்பாடியும் இருப்பதாக”  பஞ்ச் பேசி தனது உரையை முடித்துக் கொண்டார்.

 

 

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்