'என் கண் முன்னாடியே'...'தங்கச்சிக்கு இப்படி ஆகிப்போச்சே'..நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது சகோதரருடன் பள்ளிக்கு சென்ற சிறுமி,பள்ளி பேருந்து மோதி சகோதரரின் கண் முன்பே உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் சையது ரஃபிக் ஜக்ரியா.சவுதியில் வேலை பார்த்துவரும் இவர்,தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.இவரின் இளைய மகள் ஆயிஷா சுஹைனா தனது வீட்டின் அருகில் இயங்கி வரும் தாரூஸ் சலாம் எனும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.ஆயிஷாவை எப்போதும் அவரது சகோதரர் தான் பள்ளிக்கு கூட்டிச்சென்று விடுவது வழக்கம்.
அந்தவகையில் இன்று காலை வழக்கம் போல் ஆயிஷாவை அவரது சகோதரர் பள்ளிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.பள்ளியின் நுழைவு வாயிலியில் ஆயிஷாவை இறக்கி விட்டுவிட்டு வகுப்பறைக்குள் செல்வது வரை காத்திருந்துள்ளார்.அப்போது அந்த பள்ளியின் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்து பின்னோக்கி வந்து கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி ஆயிஷாவின் மீது மோதியது.
பேருந்து மோதிய வேகத்தில் அதன் பின்புற சக்கரத்தில் சிக்கிக்கொண்ட சிறுமி ஆயிஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கோர கட்சியினை கண்ட அவரது சகோதரர்,தனது கண்முன்பே தனது தங்கை இறந்ததை கண்டு கதறி அழுதார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.பள்ளி வளாகத்தில் அண்ணனின் கண்முன்பே தங்கை உயிரிழந்த சம்பவம்,அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 'போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து'.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது!
- ‘பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து.. 14 பேர்..’ பதறவைத்த விபத்து!
- 'எக்ஸ்பிரஸ் சாலையில் தொடரும் சோகம்'...கோரமான விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து!
- '16 வயது மாணவனுக்கு 4 நாளாக பாலியல் தொல்லை’: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை!
- நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட கோளாறு .. தடுமாறிய 1300 பயணிகள்.. திக் திக் நிமிடங்கள்!
- ‘சாலையைக் கடக்க முயற்சித்த பெண்’.. வந்த வேகத்தில் அடித்து தூக்கி வீசப்பட்டு விபத்து!
- ‘அதிக எடையால் மூழ்கிய கப்பல்’.. 100 பேர் பலி.. உலகை உலுக்கிய விபத்து சம்பவம்.. வீடியோ!
- 5 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!
- 'சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பெற்றோர்'...குழந்தைகளுக்கும் இப்படியா?...கடுப்பான பள்ளி!
- மாணவியின் பொதுத் தேர்வுக்காக, பாட்டியின் இறுதிச் சடங்கை தள்ளிவைத்த உறவினர்!