அரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsஅரசுப் பேருந்தில் சாகசம் என்றப் பெயரில் பள்ளி மாணவர்கள் செய்த அட்டூழியங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
ஓரிடத்தில் அரசுப் பேருந்து வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. பேருந்து நிற்கும் போது ஏறாமல், அதனைத் துரத்தியபடி மாணவர்கள் சிலர் ஓடுகின்றனர். ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் மாணவன் ஒருவன், பின்னர் யோகாசனம் செய்வது போல் தலைகீழாகத் தொங்குகின்றான்.
பேருந்துப் பின்னே ஓடிவரும் மாணவர்கள் அனைவரும் 8-ம் வகுப்பு முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் போல் காட்சியளிக்கின்றனர். ஒரு சிறுவன் மட்டும் ஜன்னலில் தொங்காமல், இதேபோல் பல மாணவர்கள் இவ்வாறு மாறி மாறி தலைகீழாகத் தொங்குகின்றனர்.
வீடியோவில் பதிந்துள்ள மாணவர்கள் அனைவரும் பள்ளி சீருடை அணிந்துள்ளார்கள். ஆனால், இந்த மாணவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை. மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டிருக்கும் போதே, பல வாகனங்கள் பேருந்து அருகிலேயே ஒட்டிய மாதிரி வந்துக்கொண்டிருந்தன.
மாணவர்களின் இந்தச் செயலைக் கண்டுப் பேருந்து உள்ளே இருந்த பயணிகள், நடத்துநர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ந்தனர். நடத்துநர் எச்சரிக்கை விடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் செய்த சாகசங்கள் பெற்றோர்களை அதிரவைத்துள்ளது.
மேலும் தாங்கள் செய்த அட்டகாசங்களை வீடியோ எடுத்து, மாணவர்கள் அவர்களது டிக் டாக் ஆப்பில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘முதல் ஓவர், முதல் பந்து’..‘அவுட்டாக்கிய அஸ்வின்’.. ஷாக் ஆன ப்ரீத்வி.. வைரலாகும் வீடியோ!
- ‘தல’யிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல வீரர்.. வைரல் வீடியோ!
- பாராட்டுக்களை அள்ளிய காவலர்... கொட்டும் மழையிலும் இடைவிடாதப் பணி... வைரலாகும் வீடியோ!
- ‘தலயின் தரமான சம்பவம்’.. கடைசி ஓவர் ஹாட்ரிக் 6,6,6. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!
- ‘1 பந்துக்கு 2 ரன் அவுட் எடுக்க நெனச்சா இப்டிதான் நடக்குமோ’.. வைரலாகும் வெறித்தனமான ரன் அவுட் வீடியோ!
- ‘இவரு அஸ்வினுக்கே டஃப் கொடுப்பாரு போல’.. ‘அடுத்து ஒரு மன்காட் வார்னிங்’.. வைரலாகும் வீடியோ!
- ‘அப்டி என்ன எடுத்துட்டு போயிருப்பாரு?’.. போட்டியின் நடுவில் திடீர் பரபரப்பு.. வைரலாகும் நபரின் வீடியோ!
- ‘முடிஞ்சா புடிச்சு பாரு’..சென்னை மால் ஒன்றில் ஓடிய ஜிவா தோனி.. வைரலாகும் வீடியோ!
- “இது ஐபிஎல்.. க்ளப் மேட்ச் கெடையாது” .. ‘கடுப்பான கோலி’.. சர்ச்சையை ஏற்படுத்திய கடைசி பந்து.. வைரலாகும் வீடியோ!
- ‘நேஷனல் சூப்பர் ஸ்டார்’ காத்து வந்த ரகசியம்.. போட்டுடைத்த ‘ப்ராவோ’.. வைரலாகும் வீடியோ!