21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியில்லை- ரஜினி..! அவரே ஆதரவு கொடுப்பார் என நம்பிக்கை உள்ளது- கமல்..!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsவரயிருக்கிற 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 -ம் ஆண்டு தனது அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இதனை அடுத்து வரும் 2021 -ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து வரயிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என கடந்த ஏப்ரல் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கடுத்து தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், வருகிற சட்டமன்ற இடைத்தேர்ததில் போட்டியிடவில்லை என தெரிவித்தார். இதனை அடுத்து தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சொல்லி இருந்தீர்கள் அது மாநில கட்சியா? இல்லை மத்திய கட்சியா? என நிருபர் எழுப்பிய கேள்விக்கு இரண்டு கட்சிகளுக்கும்தான் என நடிகர் ரஜினிக்காந்த் பதிலளித்தார்.
இதனை அடுத்து வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாராகி வருவதாகவும், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து நடிகர் ரஜினிக்காந்திடம் இடைதேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்பீர்களா என நிருபர் எழுப்பிய கேள்விக்கு,‘கேட்பது என்பது இரு தரப்புக்கும் சங்கோஷத்தை ஏற்படுத்தும். ஆதரவு கேட்காமல் கொடுப்பதும், பெருவதும் பெரிய விஷயம்’என கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- எனக்கு பிறகு எனது மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வரப்போவதில்லை: கமல்!
- மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி அழைப்பை நிராகரித்த கட்சி.. நடந்தது என்ன?
- கெஜ்ரிவாலுடன் சந்திப்பு: ‘இதில் அரசியல் இல்லை என சொல்லிவிட முடியாது!’
- ‘எந்த தண்ணிய சொல்றாங்கன்னு தெரியலயே?’.. கமல் கிண்டல்!
- ஜெ.வின் பிறந்த நாளைக் கொண்டாடும் அவர்களால், இறந்த நாளை சொல்ல முடியுமா?
- ‘பரபரப்பான அரசியல் சூழலில்’, விஜயகாந்தை சந்தித்த ரஜினி.. ரஜினி சொல்லும் காரணம்!