‘அது சரி.. அவர் எப்படி இங்க வந்து பேசலாம்?’.. எலக்ஷன் ரூல்ஸ மீறலாம்.. கல்லூரிக் கல்வி இயக்குனர் கேள்வி!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsசென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விதமாக பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்துக்கு வந்துள்ள ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரிக்கு வந்துள்ளார். அங்கு சேஞ்ச் மேக்கர்ஸ் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடிய ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக மாணவிகளிடம் தன்னை சார் என்று அழைக்காமல், ராகுல் என்றே அழையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த ராகுலின் அணுகுமுறைக்கு மாணவிகள் அரங்கை அதிரவைத்தனர். அதன் பின்னர் ராகுலை ராகுல் என்றழைத்த பெண்ணும் அரங்கை அதிரவைத்திருந்தார். அதன் பின்னர் ஊழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பேசிய ராகுல் காந்தி, மோடியையும் மத்திய அரசினையும் விமர்சித்ததோடு, தாங்கள் வந்தால் எந்தெந்த மாற்றங்களை எல்லாம் நிகழ்த்துவோம் என்றும் கூறினார்.
இது ஒரு வகையிலான பிரச்சார தொனியில் இருந்ததால், இக்கல்லூரியின் கல்வி இயக்குனர், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்க, ராகுல் கலந்துகொண்ட பேசிய இப்படி ஒரு நிகழ்ச்சி ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது? எவ்வாறு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று ஆய்வு செய்து நிர்வாகத்திடம் அறிக்கை வழங்குமாறு கல்லூரியின் கல்வி இணை இயக்குனருக்கு இக்கல்லூரியி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை லயோலா கல்லூரியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில், மத்திய பாஜக அரசினை விமர்சித்து வரையப்பட்ட ஓவியங்களால் எழுந்த சர்ச்சையை அடுத்து அக்கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியதோடு அதற்கான விளக்கமும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘இத பத்தி நீங்க சொன்னா அது வேற லெவல்’.. ரஹ்மான், சச்சினிடம் மோடி ரிக்வஸ்ட்!
- 'மோடியை ஏன் கட்டி புடிச்சேன்'... 'ராகுல் ஜி ரொம்ப கூல்'...'செல்ஃபி'...தெறிக்க விட்ட ராகுல்!
- பெண்களை எப்படி ட்ரீட் பண்ணனும் என்பதில் தமிழ்நாடுதான் முன்மாதிரி: ராகுல்!
- 'உங்களுக்கு ஒரு ரிக்வஸ்ட்'...'ஹலோ ராகுல்'...அரங்கை அதிர வைத்த 'ஸ்டெல்லா மேரீஸ் மாணவி'...வீடியோ!
- மகளின் கல்யாண பத்திரிகையில் இப்படி ஒரு காரியத்தை செய்த விநோத தந்தை!
- நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு: தலைமை தேர்தல் ஆணையர்!
- மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம்.. ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
- ‘கையெழுத்தான திமுக - மதிமுக கூட்டணி: இடைத் தேர்தலிலும் திமுகவுக்கே ஆதரவு’.. வைகோ!
- அந்த குழந்தைகளை இப்படி கிண்டல் பண்ணலாமா?...வலுக்கும் எதிர்ப்பு...வைரலாகும் வீடியோ!
- திமுகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய விசிக: எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்?