‘பவர் ஸ்டாரை முன்னிறுத்தும் உண்மையான இகுக நாங்கள்தான்’.. உறுதிப்படுத்திய மாநில தலைவர்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டார் தென் சென்னையில் போட்டியிடவுள்ளதாகவும், விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பத்திரிகை ஒன்றிற்கு கூறியிருந்தார்.

பலரின் கவனத்தையும் குவித்த இந்த புதிய அறிவிப்பு எந்த அளவுக்கு உண்மை? எந்த கட்சியின் சார்பில் பவர் ஸ்டார் போட்டியிடுகிறார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. தென் சென்னையில் பெரும் கட்சிகளில் இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர்கள் பலரும் நிற்கும்போது, பவர் ஸ்டார் புதிதாக நிற்பது பற்றி அவரிடமே சில பத்திரிகைகள் கேட்டுள்ளன.

அப்போது பேசிய பவர் ஸ்டார், கடந்த ஓராண்டுக்கு முன்பே, இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்திருந்த பவர் ஸ்டார் சீனிவாசன், அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வருவதாகவும், இந்த கட்சி தமிழகத்தில் 10 தொகுதிகளில் நிற்கவுள்ளதாகவும் இந்த கட்சியின் சார்பில்தான், தென் சென்னையில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த தொகுதியில் தனக்கு போட்டியாக யாருமில்லை என்றும், தான் ரஜினியையே போட்டியாக கருதுவதாகவும், ஆனால் அவர் சந்திக்காத இந்த தேர்தலை தான் தைரியமாக சந்திக்கவுள்ளதாகவும் மக்களைப் பொருத்தவரை தன்னைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை என்றும் அவர்களுக்கு செல்லப் பிள்ளையான தன்னை அவர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.  ஆனால் இந்திய குடியரசு கட்சியினைப் பற்றிய முழுமையான விபரங்கள் பலருக்கும் குழப்பமாக இருந்து வந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் சூசை, சில தகவல்களை செய்தி சேனல் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்திய குடியரசு கட்சி என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இந்த கட்சிப் பிரிவுகளுள், முதன்மையானதுதான் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் ஏ பிரிவு. இந்த கட்சிதான் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் இதுதான் தங்களுடைய இந்திய குடியரசு கட்சி என்றும் கூறியவர்,  மகாராஷ்டிராவை பிறப்பிடமாகக் கொண்ட இதன் கொள்கை வரைவுகள் அம்பேத்கரால் உருவாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதன் மாநில துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனைத்தான் தென் சென்னையில் நிறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்