‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை’.. பரபரப்பான வீடீயோவை வெளியிட்ட ‘பார்’ நாகராஜன்!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsபொள்ளாச்சி பாலியல் விவக்காரம் தொடர்பாக வெளியான வீடியோவில் இருப்பது தான் இல்லை என பார் நாகராஜன் புதிய வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய நால்வரை போலிஸார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
அப்போது இது தொடர்பாக புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும் பொள்ளாச்சி பாலியில் விவகாரம் எதிரொலியாக நேற்று நாகராஜனின் பார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் தொடர்பான வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும், அது கைதாகி சிறையில் இருக்கும் சதீஷ் எனவும் பார் நாகராஜன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருப்பதாகவும், தன் மீதான குற்றத்தை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘கல்யாணம் ஆயிடுச்சு.. அவனத்தான் 2 பொண்ணுங்க ஏமாத்துனாங்க..’ தாயார் கிளப்பும் புது தகவல்!
- பொள்ளாச்சி பாலியல் கொடூரம் எதிரொலி.. 'பார்' நாகராஜனின் பாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
- இறங்கிய சிபிசிஐடி.. முக்கிய குற்றவாளி வீட்டில் முதற்கட்ட விசாரணை தொடக்கம்!
- ‘சிலரின் அரசியல் ஆதாயம்’.. ‘தற்கொலை செய்வதைத் தவிர’.. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கலெக்டரிடம் வேதனை!
- ‘அம்மாவை கட்டிபிடுச்சு அழனும் போல இருந்தது’.. பொள்ளாச்சி சம்பவம் குறித்த கோவை பெண்ணின் உணர்வுப்பூர்வமான பேஸ்புக் பதிவு!
- 'பொள்ளாச்சி பாலியல் வழக்கு'.. திருநாவுக்கரசுக்கு ஜாமின் கோரிய தாய்.. நீதிமன்றம் மறுப்பு!
- 'அண்ணா.. விட்ருங்கணா’.. கதறிய பெண்கள்.. சீரழித்தவர்களுள் ஒருவரான அதிமுக உறுப்பினர் நீக்கம்!