'அந்த கேஸுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை'..விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க தயார்..‘பார்’நாகராஜன் கலெக்டரிடம் மனு!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsபொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் பார் நாகராஜன் என்பவர் கோவை ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200 -க்கும் அதிகமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனை அடுத்து நேற்று இவரின் பார் பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பார் நாகராஜன் பேசியதாவது,‘எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமில்லை. எனக்கு வேண்டாதவர்கள் இந்த வழக்கில் என்னை சம்பந்தப்படுத்துகின்றனர். அதனால்தான் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தேன். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். காவல்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்புக் கொடுக்க தயாராக உள்ளேன். மேலும் இதுதொடர்பாக யார் மீதும் அவதூறு வழக்கு கொடுக்கப் போவதில்லை’ என விகடன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘பொள்ளாச்சி விவகாரம்’.. போராட்டம் நடத்திய மாணவர்கள்.. கைது செய்ய முயன்ற காவல்துறை.. அரணாக காத்த மாணவிகள்!
- ‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை’.. பரபரப்பான வீடீயோவை வெளியிட்ட ‘பார்’ நாகராஜன்!
- ‘பொள்ளாச்சி விவகாரம்’.. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்.. மாநில மகளிர் ஆணையம்!
- ‘அங்க என்ன நடக்குதுன்னு யாராச்சும் சொல்றீங்களா?’.. பொள்ளாச்சி வழக்கு பற்றி அஷ்வின்!
- ‘கல்யாணம் ஆயிடுச்சு.. அவனத்தான் 2 பொண்ணுங்க ஏமாத்துனாங்க..’ தாயார் கிளப்பும் புது தகவல்!
- பொள்ளாச்சி பாலியல் கொடூரம் எதிரொலி.. 'பார்' நாகராஜனின் பாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
- இறங்கிய சிபிசிஐடி.. முக்கிய குற்றவாளி வீட்டில் முதற்கட்ட விசாரணை தொடக்கம்!
- ‘சிலரின் அரசியல் ஆதாயம்’.. ‘தற்கொலை செய்வதைத் தவிர’.. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கலெக்டரிடம் வேதனை!
- ‘அம்மாவை கட்டிபிடுச்சு அழனும் போல இருந்தது’.. பொள்ளாச்சி சம்பவம் குறித்த கோவை பெண்ணின் உணர்வுப்பூர்வமான பேஸ்புக் பதிவு!
- 'அண்ணா.. விட்ருங்கணா’.. கதறிய பெண்கள்.. சீரழித்தவர்களுள் ஒருவரான அதிமுக உறுப்பினர் நீக்கம்!