ரூ.6 டிக்கெட்டுக்கு ரூ.10 கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்.. நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துனர்.. மகளிர் தினத்தில் சோகம்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

சில்லறைப் பிரச்சனைக்காக மாற்றுத்திறனாளி பெண் பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் மகளிர் தினத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான சர்மிளா. இவர் ஸ்டேஷ்னரி பொருள்களை அரசு அலுவலங்களில் விற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தனது தங்கையை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் ஸ்டேஷ்னரி பொருள்களை வாங்க கோவைக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது டிக்கெட் எடுப்பதற்காக 10 ரூபாயை சர்மிளா நடத்துனரிடம் கொடுத்துள்ளார். 6 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாயை கொடுத்தற்காக நடத்துனர் சர்மிளாவை கோபமாக திட்டியுள்ளார். பின்னர் 1 ரூபாய் கொடுத்தால் 5 ரூபாய் தருகிறேன் என டிக்கெட்டின் பின்னால் எழுதிக் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து 6 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்தால்தான் தவறு நான் 10 ரூபாய் தானே கொடுத்தேன் என நடத்துனரிடம் சர்மிளா கேட்டுள்ளார்.  உடனே ஆத்திரமடைந்த நடத்துனர் பொம்பளை பிள்ளைக்கு இவ்வளவு திமிரா, என தகாத வார்த்தையில் திட்டி பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த சர்மிளா கண்ணீருடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அந்த தனியார் பேருந்தின் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி என்றுகூட பாராமல் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துனரின் செயல் மகளிர் தினத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TIRUPPUR, BUS, WOMENSDAY2019, CRIME

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்