‘அடுத்த 15 வருஷத்துல கிட்னி, இதயம் எல்லாம் கடைகளில் கிடைக்கும்’: வைரமுத்து!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

திராவிடர் கழகம் சார்பில், தி.க-வின் தலைவர் வீரமணி தலைமயேற்று நடத்திய சமூக நீதி மாநாடு நிகழ்ந்தது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியவை அதிரவைத்துள்ளன.

கி.வீரமணி, வைகோ, வைரமுத்து மற்றும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதில் பேசிய வைரமுத்து, நிர்வாணமாய் இருந்த தமிழ் இனத்திற்கே பயனாடை கொடுத்தவர் என்றும் மானத்தை ஆடையாக அணிய செய்தவர் என்றும் தந்தை பெரியாரை புகழ்ந்து பேசியுள்ளார். பின்னர் பெரியாருக்கு பின், மணியம்மை, அவருக்கு பிறகு வீரமணி என்று இயங்கும் திராவிடர் இயக்கதின் தலைவர் கி.வீரமணி இந்த விஞ்ஞான யுகத்தில் 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்றும் பேசினார்.

மேலும் அவர் வீரமணியைப் பார்த்து, ‘ஒரு 15 வருடங்களுக்கு மட்டும் நீங்கள் உங்கள் உடலைப் பார்த்துக்கொண்டால் போதும், பின்னர் இதயம், கிட்னி போன்ற  மனித உறுப்புகள் கடைகளிலேயே விற்கப்படத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது அதன் உடம்பில் ஒரு ஜிப் ஒன்றை பொருத்தி அதன் இதயத் துடிப்பு, சர்க்கரை அளவு மற்றும் பல நோய்க்குறிகளை தானாகவே கண்டறிந்து சீர்படுத்துவதற்கு அந்த ஜிப் உதவும்படி வைத்திருப்பார்கள்’ என்று பேசினார்.

மேலும், ‘பெரியார் மணியம்மையாரின் திருமணம் பற்றிய விமர்சனம் உருவானது. ஆனால் திருமணம் என்பது வயதைக் கடந்து எதிர்பார்ப்பில்லாமல் ஆண்-பெண் இருவரால் மனமொத்து செய்துகொள்ளக்கூடியது. அவ்வகையில் இந்திய துணை கண்டத்தின் பழைய நாகரீகத்தை வீசியெறிந்துவிட்டு ஒத்த கருத்தால் திருமணம் செய்து புதிய திருமண உறவு முறையை கற்றுக்கொடுத்த தம்பதிகள் அவர்கள். இதுகுறித்த எந்த விவாதத்துக்கும் நான் தயார். பெரியாரின் குணங்களே மணியம்மைக்கும் தற்போது வீரமணிக்கும் இடம் பெயர்ந்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பேச சொல்லிக்கொடுக்க வேண்டும். நாளைய தினம் நமது அரசுதான் அமையப்போகிறது’ என்று கூறியுள்ளார்.
 

VAIRAMUTHU, SOCIALJUSTICE, DK

OTHER NEWS SHOTS