‘நரசிம்ம அவதாரம் எடுத்தது போல எதிரிகளை அழித்துள்ளார் மோடி’: ஓபிஎஸ் புகழாரம்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இன்று நிகழ்ந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மோடியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதன் முதற்கட்டமாக குமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  தவிர மதுரை முதல் செட்டிக்குளம் வரையும், செட்டிக்குளம் முதல் நத்தம் வரையிலுமான சாலை விரிவாக்கத் திட்டம் மற்றும் கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான பூங்கா அமைக்கும் திட்டம் மற்றும் போக்குவரத்து மியூசியம் ஆகிய திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் பிரதமர் மோடியை வாழ்த்திப் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், நமது நாட்டில் மக்கள் பயனுறும் திட்டங்களை மோடி வகுப்பதில் மறைந்த முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா மற்றும் நம்முடைய பிரதமர் மோடி இருவரின் எண்ணங்கள் ஒன்றுபோல இருக்கின்றன என்று கூறியவர், மோடியின் இந்த திட்டங்கள், நாம் கூடிய சீக்கிரம் பெறவிருக்கும் இமாலய வெற்றிகளின் தொடக்கம் தானே தவிர வேறொன்றும் அல்ல என்று பேசினார்.  மேலும் அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு பணியாத மோடி நரசிம்ம அவதாரம் எடுத்தது போல, நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை அழித்துள்ளார்.

இதன் மூலம் நம் நாட்டை எதிர்க்கும் நோக்கில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை மோடி அச்சுறுத்தியிருக்கிறார். எதிர்க்கட்சிகளும் பாராட்டும் அளவுக்கு மோடியின் செயல்கள் இருந்திருக்கின்றன. இதற்காக பிரதமருக்கு நன்றி சொல்வதாகவும் கூறினார்.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்