திடீரென வானத்தை நோக்கி 9 முறை சுட்ட அதிகாரி.. ’ஏன் இப்படி செஞ்சார்’..

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

அரியலூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் 9 முறை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மட்டுமில்லாமல் கலெக்டர் அலுவலகத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே பொதுத் தேர்தல் என்றால் இந்தியா முழுவதும் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள பிற மாநிலங்களுக்கான தேர்தல் பாதுகாப்பு பணியில் வழக்கமாக ஈடுபடுத்தப்படுவது உண்டு.

அவ்வகையில் ஏப்ரல் மாதம் நிகழவிருக்கும் மக்களவை தேர்தலை ஒட்டி தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் மிகத் தீவிரமாக நிகழ்ந்துவருகின்றன மிக அண்மையில்தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனு தாக்கலுக்கான காலம் நிறைவுற்ற நிலையில் தொடர்ந்து அடுத்த கட்ட தேர்தல் பணிக்கான, ஆயத்தமாக அதிகாரிகள் பலரும் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஷேமந்த், என்பவர் தேர்தல் பணி நிமித்தமாக தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இன்று இன்று காலை அவர் யாரும் எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி 9 முறை சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியாளர்கள், அம்மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூரில் பரபரப்பான மெயின் சாலையில் உள்ள சுற்றுலா மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஹரியானாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இவ்வாறு 9 முறை வானத்தை நோக்கி சுட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடமும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

ELECTIONCOMMISSION, LOKSABHAELECTIONS2019, GUNSHOT, BIZARRE, ARIYALUR

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்