பிரசவத்தின்போது, இடுக்கி வைத்து இழுத்ததால், குழந்தையின் தலை துண்டான சோகம்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் சுகப்பிரசவத்தின்போது பிறந்த குழந்தை ஒன்றின் தலை இரண்டாக துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியலைகளை உண்டாக்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது கூவத்தூர். இந்த ஊரினைச் சேர்ந்தவர் பொம்மி. தியாகராஜன் என்பவருக்கும் இவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிகழ்ந்தது. இதன் பிறகு இந்த தம்பதியினர் ஆவடி அருகே உள்ள பகுதியில் வசித்துள்ளனர்.


இந்நிலையில் கர்ப்பம் தரித்த பின், சீமந்தத்திற்காக தனது தாய் வீட்டுக்கு பொம்மி சென்றார். அந்த சமயத்தில் அதிகாலை 5 மணி அளவில் அவருக்கு பிரசவ வலி உண்டானதை அடுத்து அவர் உடனே கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு காலை 6.30 மணி என்பதால் மருத்துவர்கள் இல்லாத நிலையில், அங்கிருந்த செவிலியர் முத்துக்குமாரி என்பவர் பொம்மிக்கு பிரசவம் பார்க்கும் போதுதான் இந்த மனதை நெருடும் கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தை முழுமையாக வெளிவரும் முன்னரே, குழந்தையின் தலைப் பகுதியில் இடுக்கி வைத்து முத்துக்குமாரி இழுத்துள்ளார். இதனால் இலகுவான மென்மையான அந்த சிசுவின் தலை பரிதாபமாக துண்டாகி கையோடு வந்துள்ளது.      

குழந்தையின் மற்ற பாகங்களான கை, கால்கள் எல்லாம் தாய் வயிற்றிலேயே சிக்கிக் கொண்டது. இதனையடுத்து ஆரம்ப சுகாதாரா நிலைய நிர்வாகிகளால் பெண்மணி பொம்மி, உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆபரேஷன் மூலம் அவரது வயிற்றில் இருந்து குழந்தையின் பிற பாகங்கள் எடுக்கப்பட்டன.  தாய் பொம்மி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டிலேயே சுகப்பிரசவம்  பார்ப்பதை அனுமதித்தால், யூடியூபை பார்த்து பிரசவம் செய்வது போன்ற சிக்கல்களால் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பு நேர்வதும், மருத்துவமனைகளில் இதுபோன்ற அலட்சியத்தால் குழந்தைகள் பலியாவதுமான கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பலரது ஒருமித்த கருத்தாக உள்ளது.

HOSPITAL, BIZARRE, BABY

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்