'அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'.. 'காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்'... 'வெளியான பகீர் காரணம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல்லில் இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த காதல் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வசித்து வரும் தம்பதி மணிகண்டன் (28) - ஆனந்தி (26). இவர்கள் இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மோகன்குமார் (7) என்ற மகனும், சித்திகா ஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இந்த சூழலில் மணிகண்டன் தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வந்தபோது, கடந்த சில வாரங்களாக ஆனந்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனுக்கு அவருடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என அவரை கண்டித்ததாகவும், அதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட, தம்பதி நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று தங்களை பிரித்து வைக்கும்படி மனு அளிக்க, போலீசார் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் படி தெரிவித்ததை அடுத்து கணவன் - மனைவி இருவரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அங்கு கிடந்த பாறாங்கல்லை எடுத்து ஆனந்தியின் தலையில் போட, அதில் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறி, வலியால் அலறிய ஆனந்தி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆனந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வர, அதைப் பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட அங்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மணிகண்டன் தன்னுடைய மனைவி ஆனந்தியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆனந்தியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாத்ரூம் கண்ணாடியில் இருந்த'... '14 வயது சிறுமியின் அதிர்ச்சி குறிப்பு'... 'தாய்க்கும், மகனுக்கும் அடுத்தடுத்து நேர்ந்த பயங்கரம்'... 'மாநிலத்தையே உலுக்கியுள்ள சம்பவம்'...
- 'இந்த பிரச்சனைதான்'... 'ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்தே விலக காரணமா?... 'சிஎஸ்கே உரிமையாளர் பரபரப்பு பேட்டி!'...
- 'ஆற்றில் ஆடைகளின்றி மிதந்த உடல்'... 'திருமணமான ஒரே மாதத்தில்'... 'இரக்கமின்றி கணவரே செய்த குரூரம்'... 'வாக்குமூலத்தில் சொன்ன நடுங்கவைக்கும் காரணம்!'...
- “சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்!”.. அமெரிக்காவில் நீச்சல் குளம் அருகே நடந்த பயங்கர சம்பவம்.. நடந்தது என்ன?
- IPhoneஐ திருடியதாக கூறி... வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!.. சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அரங்கேறிய மிருகச்செயல்!
- “ஹனிமூனில் கால் டாக்ஸி டிரைவரை விட்டு மனைவியைக் கொன்ற கணவர்!”.. ‘சிறையில் இருக்கும் டிரைவர்’.. பரோல் விஷயத்தில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்!
- 'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை!'...
- 'அவசர அவசரமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா'... 'குடும்பத்தினர் மீதான தாக்குதலில் நேர்ந்த சோகம்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!'...
- '16 வயசு மகளையும் ஏமாத்தி கூட்டிட்டுபோனோம்'... 'கணவரும் வந்து கெஞ்சினாரு'... 'மனைவி, மகளின் காதலன் கொடுத்த'... 'அதிரவைக்கும் வாக்குமூலம்!'...
- "1 வயசுல குழந்தைய வெச்சுட்டு இப்படியா ஆகணும்?" - 'WhatsAppல் வந்த ஆடியோவைக் கேட்டு'... 'நொறுங்கிப்போன குடும்பம்'!!!