என்னாது? ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்கை ஒரே மாதிரி இருக்கா?

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக உள்ள நிலையில், கூட்டணி கட்சிகள், கட்சி வேட்பாளர்கள் என எல்லாமே அறிவிக்கப்பட்டு வருவதால் தேர்தல் சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டது எனலாம்.

திமுக-அதிமுகவைப் பொருத்தவரை, 8 தொகுதிகளில் நேரடியாக மோதுவதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் பரபரப்பாக செயல்படத் தொடங்கியுள்ள இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக பிரச்சார வேலையை  தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

அதன்படி வரும் 20-ஆம் தேதி(நாளை) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலான தனது சுற்றுப்பயணத்துக்கான திட்ட விபரங்களை வெளியிட்டுள்ளார். இதேபோல் திமுக- அறிக்கையினையும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து வெளியிட்டுள்ளார். அதன் பின்னர், அறிக்கையின் முக்கிய அம்சங்களை மட்டும் அங்கேயே வாசித்த மு.க.ஸ்டாலின், பாஜகவினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து, வேலையில்லா திண்டாட்டமும் விலைவாசியும் ஏறியது போல, தமிழகத்தில் அதிமுகவினால் ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளதால் அரசு அவல நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

பின்னர் திமுகவின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட ஸ்டாலின், தங்கள் தேர்தல் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தல் அறிக்கையினை  உருவாக்குவதற்காக மக்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் ஆன்லைன் மூலமாக கேட்டதாகவும், அதற்காக ரெஸ்பான்ஸ் செய்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இம்முறை, சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை, கல்வியை மாநில பட்டியலில் சேர்ப்பது, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, உள்ளிட்ட அம்சங்கள் எல்லாமே, திமுக-வின் தேர்தல் அறிக்கையிலு, அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளன.

இவை தவிர, கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடங்கப்படுவது, தமிழை இணை ஆட்சி மொழியாக கொண்டுவருவது, இலங்கையில் இருந்து வரும் அகதியான தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது, தென்னிந்திய நதிகளை இணைப்பது, கிராமப்புற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சுய தொழிலுக்கான கடனாக வழங்கப்படுவது உள்ளிட்ட அம்சங்கள் திமுகவின் அறிக்கையில் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. 

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்