நடைப்பயிற்சியில் திடீரென மயங்கி விழுந்து மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம்.. கதறி அழுத பக்தர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி  இன்று காலை மரணமடைந்துள்ளது. 

Advertising
>
Advertising

Also Read | பைக் டாக்ஸியில் நம்பி ஏறிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.? தென்னிந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.!

பிரபலமான புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்த போது தனியார் நிறுவனம் மூலம் ஐந்து வயதான லட்சுமி என்ற பெண் யானை விநாயகர் கோயிலுக்கு அளிக்கப்பட்டது.

கோயில் வளாகத்திலேயே லட்சுமி யானை  ஓய்வெடுத்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் இந்த லட்சுமி யானை 48 நாள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வின் போது யானையின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலைகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வனத் துறை மருத்துவர்கள் பரிசோதித்த பின், யானை லட்சுமி கோவிலுக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை நடைப்பயிற்சியின் போது கல்வே கல்லூரி அருகே சென்ற போது மயங்கி விழுந்த யானை  அங்கேயே உயிரிழந்தது என கூறப்படுகிறது. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள்  உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

உடற்கூறாய்வுக்கு பிறகு மரணத்திற்கான காரணம் தெரியவரும். மாலையில் முத்தியால்பேட்டை பஜனை மட வீதியில் யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானையின் மரணத்தால் மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. யானையின் உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read | விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த முட்டை.. பலரையும் ஆச்சரியமூட்டும் ரிசல்ட்!!..

MANAKULA VINAYAGAR TEMPLE, ELEPHANT, ELEPHANT LAKSHMI, ELEPHANT LAKSHMI PASSED AWAY, DEVOTEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்